டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்களின் பட்டியல்களை இங்கே காண்போம்.
திரைத்துறை நடிகர்களின் திறமையான நடிப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை கொண்டு நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் இருந்து டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகம் 1986 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
தமிழ் திரையுலகில் திறமையான நடிகராகவும், தமிழ்நாட்டின் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்த எம்ஜிஆர் அவர்களுக்கு அரிசோனாவின் உலக பல்கலைக்கழகம் 1974 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. நடிகராகவும், உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவராகவும், அரசியல்வாதியாகவும் இருக்கும் விஜயகாந்த்க்கு ப்ளோரிடாவில் சர்வதேச சர்ச் மேனேஜ்மென்ட் நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது.
உலக நாயகன் என ரசிகர்களால் பாராட்டப்படும் கமலஹாசன் அவர்களுக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் கடந்த 2005 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது. இதை தொடர்ந்து அறுபது ஆண்டுகாலம் கலைத்துறையில் பயணம் செய்ததற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் செஞ்சூரியன் பல்கலைக்கழகம் கடந்த 2019 கமலஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
தளபதி என்று ரசிகர்கள் மத்தியில் இன்று பெரிதும் போற்றப்படும் விஜய் அவர்களின் சிறந்த நடிப்பிற்காகவும், ஏழைகளுக்கு பல்வேறு வழிகளில் உதவி செய்வதற்காகவும் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் மாநாட்டில் கடந்த 2007ஆம் ஆண்டு விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
தமிழ் திரையுலகில் தனது திறமையான நடிப்பாற்றல் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகர் விக்ரமிற்கு கடந்த 2011ம் ஆண்டு இத்தாலியில் யூனிவர்சிட்டா போபோலே டெக்ஷீஸ் ஸ்டுடிம் மிலானோவான் என்ற பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
இந்நிலையில் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என்று பன்முகத் திறமை கொண்ட நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் வரும் ஜனவரி 11-ம் தேதி டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.