தென்னாப்பிரிக்காவிற்கு சில நாடுகள் பயணத்தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவுடன், அந்நாட்டுடன் பல்வேறு நாடுகளும் பயணத்தடை அறிவித்தது. இந்நிலையில், நேற்று ஜெனிவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் ஆதனோம் ஜிப்ரியசஸ் கூறியதாவது, தடுப்பூசி செலுத்தப்படுவதால் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிகழ்கிறது.
எனவே, கொரோனா உருமாற்றமடைய வாய்ப்பிருக்கிறது என்று பலமுறை தெரிவித்தோம். அதனை யாரும் கட்டுப்படுத்தவோ, யூகிக்கவோ முடியாது. அது தான் ஒமிக்ரான் தொற்றாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. ஓமிக்ரோன் தொற்றை விரைவாக கண்டறிந்ததற்கு, போட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு நன்றிகள்.
எனினும் சில நாடுகள், அந்நாடுகளுடன் நேரடியாக போக்குவரத்தை தடை செய்திருப்பது அதிக ஏமாற்றத்தை தருகிறது என்று கூறியிருக்கிறார்.