Categories
உலக செய்திகள்

“IHU வைரஸ்” தற்போதுவரை ஆபத்தை ஏற்படுத்தவில்லை…. WHO வெளியிட்ட தகவல்….!!

உலக சுகாதார மையம் பிரான்சில் கண்டறியப்பட்டிருக்கும் IHU என்ற புதிய வகை கொரோனா தொற்று தற்போது வரை ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டின் IHU மெடிட்டரேன் தொற்றுநோய் ஆய்வகத்தின் ஆய்வாளர்கள், கொரோனா பாதித்த 12 பேரின் உடலில், புதிய வகை கொரோனா பாதித்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸிற்கு, ஆய்வாளர்கள் IHU என்று தற்காலிகமாக பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த, வைரஸில் உள்ள மாற்றங்களை வைத்து பார்க்கும் போது, இது ஒமிக்ரான் தொற்றை விட வேகமாக பரவக்கூடியது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் எந்த வகையில் உருமாற்றமடையும் என்பது எவராலும் கணிக்க முடியாத ஒன்று.

இதனை தற்போது கண்டறியப்பட்டிருக்கும், புதிய வகை வைரஸ் உணர்த்தி விட்டது என்று கூறியிருக்கிறார்கள். டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரானை விட புதிதாக கண்டறியப்பட்டிருக்கும், இந்த வைரஸ் வேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

Categories

Tech |