உலக சுகாதார மையம், கொரோனோ கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறது.
உலக நாடுகளில் கொரோனா உருமாற்றமடைந்து பரவிக்கொண்டிருக்கிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில், உலக சுகாதார மையம் கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறது. மேலும், மக்கள் நடமாடுவதற்கும், பயணம் மேற்கொள்வதற்கும் கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொற்றை கட்டுப்படுத்துவதில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கிவிடும் என்றும் கூறியிருக்கிறது.