Categories
உலக செய்திகள்

மேடைக்கு வந்து காதில் குசுகுசு..!! டக்குனு கிளம்பிய ரிஷி சுனக்… வெளியான பரபரப்பு தகவல் ..!!

ஐநா பருவ கால மாற்ற மாநாட்டில் பாதியிலேயே பிரிட்டன் பிரதமர் ரிஷி வெளியேறிய சம்பவம் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து நாட்டின் ஷாம்- எல் ஷேக் நகரில் நடைபெற்ற ஐநாவின் பருவ கால மாற்ற மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் கிளாஸ் பருவ கால ஒப்பந்தம் பற்றி உரையாற்றும் போதும், பிற நாடுகளையும் அதிலிருந்து விலகாமல் வாக்குறுதி அளித்ததை பின்பற்றும் படியும் வலியுறுத்துவார். மேலும் இந்த பருவ கால உச்சி மாநாட்டில் இங்கிலாந்து நாட்டை தூய்மையான ஆற்றல் கொண்ட ஒன்றாக உருவாக்கும் தனது நோக்கங்களை அவர் வெளியிடுவார் என அது பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில் சொல்லப்பட்டு இருந்ததது.

இந்த நிலையில் ரிஷி சுனக் பருவ கால மாற்ற மாநாட்டில் இருந்து தீடிரென பாதியிலேயே வெளியேறினார். இது பற்றி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கார்பன் ப்ரீஃப் அமைப்பின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சுனக் பாதியில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் வீடியோ ஒன்றில் பேசும்போது சுனக் மேடையில் பேச தயாராக இருந்தபோது அவரது உதவியாளர் ஒருவர் மேடைக்கு வந்து அவரிடம் ஏதோ தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு நிமிடம் வரை உதவியாளர் ஒருவர் அவரது காதில் ஏதோ கூறியுள்ளார்.

இது பற்றி அவர்கள் ஆலோசித்தது போல தெரிகின்றது. இதனை அடுத்து மேடையில் இருந்து செல்லலாமா? வேண்டாமா? என்பது போல் அவர்கள் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மேடையிலேயே சுனக் நின்று கொண்டிருந்தார். அதனை அடுத்து மற்றொரு உதவியாளர் உடனடியாக மேடைக்கு சென்று உடனே வெளியேறி செல்லும்படி சுனக்கை வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இந்த மாநாட்டில் பாதியிலே ரிஷி வெளியேறிய போதும் அதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. உலக நாட்டு தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் ரிஷி வெளியேறியது பார்வையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |