டெல்லியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பைக்கில் சென்ற போது மாஞ்சா கயிறு கழுத்தில் பட்டு அறுத்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லியை சேர்ந்த 28 வயதான மாணவ் ஷர்மா (பொறியியல் பட்டதாரி) தனது தங்கைகளுடன் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாட டெல்லியில் உள்ள ரோகினி பகுதிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது வழியில் அவர்கள் மீது பட்டத்தின் மாஞ்சா கயிறு உரசியதால் வாகனத்தை ஓட்டிய மாணவ் ஷர்மா கழுத்து அறுபட்டு உயிரிழந்தார் என்று இருந்த காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக காவல்துறையினர் ஏடிஜிபி ராஜேந்திர சிங் சாக ர் கூறும்போது, மாணவ் ஷர்மா மற்றும் அவரது தங்கை இருவரும் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடுவதற்கு டெல்லியில் உள்ள ரோகினி பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலத்தின் மேல் செல்லும் போது அவர்களை பட்டத்தின் மாஞ்சா கயிறு ஓன்று உரசியது. இதில் மாணவ் ஷர்மா கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் வெளியேறியது. இதையடுத்து சகோதரிகள் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்றார்.

மேலும் அவர், இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். சர்மாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததே மரணத்திற்கு காரணம் என்று தெரிவித்தனர். ஏனென்றால் மாஞ்சா கயிறு கழுத்தின் உள்பகுதியில் ஆழமாக வெட்டி உள்ளது. இதனால் உணவு மற்றும் சுவாசக் குழாயின் தொடர்பு துண்டிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தனர்.