திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒன்றியத்தில் ஆளக்கூடிய பிஜேபி அரசு சொல்கிறது இலவசங்கள் வேண்டாம் என்று. நம்முடைய அமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் சொல்லுகின்றார்கள் மகளிரை வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்,அடிதட்டு மக்களுடைய வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்பதற்காக மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத்தை நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் வழங்குகிறார்கள், ஆனால் ஒன்றிய அரசு பிஜேபி அரசு இலவசம் வேண்டாம் என்கிறது.
அதேபோல விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரத்தை ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவசம் மின் இணைப்பு தந்தவர் நம்முடைய முதலமைச்சர் தளபதி அவர்கள், ஆனால் ஒன்றிய பிஜேபி அரசு இலவசம் வேண்டாம் என்று சொல்கின்றார்கள். இப்படி ஆயிரம் ஆயிரம் திட்டங்கள். மகளிருக்கு கல்லூரியில் செல்கின்றவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை என்று நம்முடைய அமைச்சர் அவர்கள் வழங்குகின்றார்கள், ஆனால் ஒன்றிய பிஜேபி அரசு இலவசங்கள் வேண்டாம் என்று சொல்கின்றது.
தமிழகத்திலே பிஜேபி இயக்கத்தில் இருக்கக்கூடியவர்களை தமிழக மக்கள் பார்த்து கேட்க வேண்டிய ஒரே கேள்வி, அடித்தட்டு மக்களுடைய வாழ்வை உயர்த்துவதற்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உறங்காமல் உழைக்கக்கூடிய நம்முடைய அமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் எங்கள் கரம் கொடுத்து எங்கள் வாழ்வின் எல்லைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
ஆனால் 410 ரூபாய்க்கு விற்ற சிலிண்டரை இன்று 1200 ரூபாய்க்கு உயர்த்தி இருக்கின்ற நீங்கள் எங்கே தமிழகத்திற்கு வருவதற்கு முயற்சிக்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். 54 ரூபாய்க்கு விற்ற டீசல் விலை இன்று 94 ரூபாய்க்கு ஒன்றிய பிஜேபி அரசு உயர்ந்திருக்கிறது எந்த முகத்தை கொண்டு தமிழகத்தில் இங்கே வந்து கொண்டு இருக்கிறீர்கள் இந்த கேள்வியை கேட்க வேண்டும்.