இந்தியாவில் சின்மயா மிஷென் என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதோடு, பாட புத்தகங்களையும் தயாரித்து வழங்குகிறது. இந்த நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கு பாட புத்தகங்களை தயாரித்து வழங்கி உள்ளது. இந்நிலையில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தயாரித்து வழங்கியுள்ள வரலாற்று பாட புத்தகத்தில் மனிதர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் மற்றும் பிராமணர்கள் என 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரிக்கப்பட்டதில் அம்பேத்கர் மற்றும் அப்துல் கலாம் போன்றவர்கள் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வரலாற்று பாடப் புத்தகத்தின் பெயர் ரேடியன் பாரத். இது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது குழந்தைகளின் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கக்கூடிய வயதில் வர்ணாசிரமக் கொள்கைகள் குறித்து படிக்க சொல்வது அவர்கள் மனதில் ஜாதியை தூண்டும் என குற்றச்சாட்டு இழந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.