தான் பயன்படுத்தும் ஐபோனில் ஹோம் பட்டன் இல்லாதது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிருப்பதியை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிம் (ஆப்பிள் சிஇஓ), தற்போதுள்ள ஸ்வைப்பை-விட ஐபோனின் பழைய பட்டன் முறை எவ்வளவோ மேல்” என்று ட்வீட் செய்துள்ளது. தற்போது வெளியாகும் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்தும் Full Screen மாடலாக வெளியாவதால் முன்பிருந்த பட்டன்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.
பழைய ஐபோன் மாடல்களில் Home என்ற ஒரு பட்டன் இருக்கும், இந்த பட்டன் மூலம் நாம் எந்த செயலியிலிருந்தாலும் எளிதில் Home-க்கு வந்துவிடமுடியும்.இரு ஆண்டுக்கு முன் வந்த iPhone X மாடலிலேயே இந்த பட்டன் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் தற்போது இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
To Tim: The Button on the IPhone was FAR better than the Swipe!
— Donald J. Trump (@realDonaldTrump) October 25, 2019