இசைவாணி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும்போது வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வதுசீசன் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த சீசனில் எலிமினேஷனான அபிஷேக் ராஜா மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார். மேலும், டான்ஸ் மாஸ்டர் அமீரும் உள்ளே நுழைந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து இசைவாணி எலிமினேஷன் ஆனார். இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும்போது வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இந்த வீட்டில் 50 நாட்கள் இருந்ததற்கு 7 லட்சம் சம்பளம் வாங்கி வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.