பொன்னியின் செல்வன் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று கார்த்திக் கூறியுள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், அதிதி ராவ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கார்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் குறித்து கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது.
மேலும் வரும் 2022 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு இத்திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இச்செய்தியால் ரசிகர்கள் வரும் பொங்கலுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.