Categories
தேசிய செய்திகள்

“நாங்க ஆட்சிக்கு வந்தா, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்”…. பிரியங்கா காந்தி வாக்குறுதி….!!!

குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றன. ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியிடப்படும்.

இந்நிலையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் ஆளும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பல கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைத்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் குஜராத் மாநிலத்திலும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு ஐந்தாம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இரண்டு மாநில சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி புதிய வாக்குறுதி அளித்துள்ளார்.

அதாவது பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ததன் மூலமாக நாட்டில் உள்ள முதியவர்களின் பொருளாதார பாதிப்பை பாஜக பதித்து விட்டது. வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக சேவை செய்பவர்கள் முதுமையில் எங்கே போவார்கள் எப்படி வாழ்வார்கள்?ஒருவர் அரசு வேலையில் சேர்க்கின்ற போது அவர் ஓய்வு பெறும் போது பொருளாதார பாதுகாப்பின்மையை சந்திக்க வேண்டியதில்லை எனவும் ஓய்வூதிய மூலம் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் எனவும் நினைக்கிறார்.

ஆனால் அதனை பாஜக பறித்துக் கொண்டது. எனவே சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசுகள் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தாகிய இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உடனே பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |