Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

கல்லூரி தேர்வு எப்போது ? ”மாணவர்கள் எதிர்பார்ப்பு” யுஜிசி அறிவிப்பு …!!

கலை, அறிவியல் கல்லுரி மாணவர்களுக்கு நடைபெறும் தேர்வு குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ்சுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூக விலகல் ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து மத்திய அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கும் முடங்கி உள்ளனர்.

The Tune Up That Every First Year College Student Needs – SMS ...

 

இதனால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்பட்டன. நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது வருகின்ற மூன்றாம் தேதியோடு ஊரடங்கு நிறைவுபெறும் இருக்கும் நிலையில், கல்லூரிகளுக்கான தேர்வு குறித்து யுஜிசி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்லூரிகளின் ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம். முதல், இரண்டு ஆண்டு மனவர்களுக்கு தேர்வின்றி இண்டர்னல் மதிப்பெண்களை கொண்டு கிரேட் வழங்கலாம்.

UGC calls meet to discuss fresh admissions, exams - education ...

 

இண்டர்னல் மதிப்பெண்கள் 50%, முந்தைய பருவத்தேர்வு மதிப்பெண்கள் 50% எனவும் எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கும், செப்டம்பரில் புதிதாக சேர்வோருக்கும் வகுப்பு தொடங்கலாம். செய்முறை தேர்வுகள், ஆராய்ச்சி படிப்பு செயல்பாடுகளை இணையவழியில் செயலிகள் மூலம் நடத்தலாம். பல்கலைக்கழகம் தங்கள் வசதிக்கேற்ப முடிவெடுக்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

Categories

Tech |