சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக புறநகர் பேருந்து நிலையங்கள் கட்டும் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதற்காக 393.74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பணிகள் தாமதமானாலும் தற்போது வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகை அன்று செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இதுவரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பும் போது 90% பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணிகள் நிறைவடையை எப்படியும் டிசம்பர் மாத இறுதி ஆகிவிடும் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்து விட்டால் தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதோடு சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை எளிதில் அடையும் விதமாக பேருந்து சேவைகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் போக்குவரத்தை சுலபமாகும் விதமாக மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.