Categories
உலக செய்திகள்

தோட்டத்தை சுத்தம் செய்யும்போது…. அடித்த அதிர்ஷ்டம்…. எவ்வளவு தெரியுமா…??

பெண் ஒருவர் தோட்டத்தில் டிடெக்டரை வைத்து சுத்தம் செய்தபோது அதிர்ஷ்டம் அடித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த 48 மதிக்கத்தக்க பெண்ணான Amanda என்பவர் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் தன்னுடைய மகன் பயன்படுத்தும் மெட்டல் டிடக்டரை வைத்து சுத்தம் செய்துள்ளார். அப்போது அவர் முதலில் இரண்டு பழைய நாணயங்களை கண்டு எடுத்துள்ளார். அதன் பின்னர் தொடர்ந்து ஹென்றி v11 என்ற பைன் தங்க நாணயமும் கிடைத்துள்ளது. இது 3 சென்டிமீட்டர் அளவாகவும், 5 கிராம் எடையுள்ளதாகவும் இருந்துள்ளது.

மேலும் இது 22 காரட் தங்க எடையாகும். இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், “இது ஆச்சரியமாக இருப்பதுடன் என்னால் நம்பவே முடியவில்லை. இந்த நாணயம் மிகவும் மெல்லியதாக இருக்கிறது. இது ஒரு சிறப்பு அம்சமாக இருக்கலாம். மேலும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நாணயம் என்னுடைய தோட்டத்தில் கிடைத்தது என்பதால் புதையலாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை” என்று மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் இந்த நாணயத்தின் மதிப்பு சுமார் 2500 பவுண்டு (இந்திய மதிப்பில் 2,48,728.40) என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |