Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப்பில் கொரோனா பற்றிய வதந்தி…மாணவரின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கொரோனா தொற்று பற்றி வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதால், அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார்  குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

டி.என். பாளையம் பகுதியில் 24 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது என  அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் வாட்ஸ் அப்பில் பொய்யாக  வதந்தி பரப்பி விட்டனர். இதை அறிந்த போலீசார்  அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். இத தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு 17 வயது மற்றும் 19 வயது உள்ள அவர்களை கைது செய்தனர்.

இதனை அடுத்து கோவையில் இருக்கும் சீர்திருத்த பள்ளிக்கூடத்தில் 17 வயது சிறுவனும், கோபியில் இருக்கும் மாவட்ட சிறையில் 19 வயது மாணவனும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த 19 வயது மாணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |