Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப் புதிய கொள்கையை ஏற்காவிட்டால்… இந்த வசதிகள் எல்லாம் நிறுத்தப்படும்… என்னென்ன..?

வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்திய தனி நபர் கொள்கையை ஏற்காவிட்டால் கணக்குகள் நீக்கப்படாது என்றும் ஆனால் ஒரு சில வசதிகள் நிறுத்தப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் செயலியில் புதிதாக தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் அறிமுகம் செய்ததில் இருந்து அதை சுற்றி சர்ச்சைகள் ஆரம்பித்து வந்தது. இதையடுத்து இந்த விதிகள் ஆகும் தேதி மே 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும்,  ஏற்றுக்கொள்ளாதவர்கள் கணக்கு நீக்கப்படும் என்று செய்திகள் பரவி வருகிறது. இதற்கு பல எதிர்ப்புகள் வந்ததால் மே 15க்கு பிறகு புதிய கொள்கைகளை ஏற்காதவர்கள் கணக்குகள் நீக்கப்படாது என்றும், ஆனால் பல வசதிகள் நிறுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

இவற்றை நினைவுபடுத்தும் விதமாக வாட்ஸ்அப் தனது வலைத்தளத்தில் ஒரு செய்தியை அளித்துள்ளது. புதிய கொள்கைகளை மறு ஆய்வு செய்ய அவகாசம் வழங்கப்படும் என்றும், அதன் பிறகு சில வாரங்களுக்கு பிறகு நினைவூட்டல் அனுப்பப்படும் என கூறியுள்ளது. பின்னர் படிப்படியாக சேவைகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது அதன்படி முதலில் பயனாளர்கள் சேட் லிஸ்ட்டை பயன்படுத்த முடியாது.

ஆனால் இன்கமிங் வாட்ஸ்அப் அழைப்புகள், வீடியோ காலில் பேசமுடியும். நோட்டிபிகேஷன் எனேபிள் செய்திருந்தால் குறுந்தகவல்களை படித்து பதில் அளிக்க முடியும். மிஸ்ட் போன் மற்றும் வீடியோ கால்களை அழைத்துப் பேச முடியும். புதிய கொள்கைகளை ஏற்காவிட்டால் குறுந்தகவல் அனுப்புதல், இன்கம்மிங் கால்களுக்கு நிறுத்தப்படும். இந்த நினைவூட்டல் ஒரே நேரத்தில் எல்லா பயனாளர்களுக்கும் வராது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |