Categories
டெக்னாலஜி பல்சுவை

whatsapp நிறுவனத்தின் 1000 ஜி.பி. இலவச டேட்டா, பரவும் தகவல்..!!

1000 ஜி.பி. டேட்டாவை watsapp நிறுவனம் தனது பிறந்தநாளை முன்னிட்டு  இலவசமாக வழங்க இருப்பதாக தகவல் பரவி வருகின்றது.

whatsapp நிறுவனம் 1000 ஜி.பி. டேட்டாவை இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு  வழங்க இருப்பதாக watsapp-இல் குறுந்தகவல் பரப்பட்டுவருகிறது. இந்நிலையில் இச்செய்தி சைபர்செக்யூரிட்டி ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களுக்கும் சென்றுள்ளது. இந்த செய்தியானது தற்போது வாட்சப்பில் வைரல் ஆகியுள்ளது.

ஆண்டுவிழா கொண்டாட்டம், 1000 ஜி.பி. இலவச டேட்டா - வாட்ஸ்அப் வைரல் உண்மையா?

இந்த குறுந்தகவலில் உள்ள இணைய முகவரி watsapp நிறுவனம் அனுப்பவில்லை என்றும், விசாரணையில் இந்த குருந்தகவலை பயனர் விவரங்களை திருடும் கும்பல் உருவாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது. வழக்கம்போல  சலுகைகள்  அதிகமாக  வழங்குவதாக கூறும் குறுந்தகவலில் பொய்யான முகவரிகளே கொடுக்கப்பட்டு அதை click செய்தால் Malware வலைத்தளம் திறந்து பயனிட்டாளர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரித்து கொள்ளும்.

Related image

மேலும் இதுபோன்று பரப்பப்படும் குறுந்தகவலில் இணைய முகவரியை click செய்தால்  சில கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு வலைத்தளம் open ஆகும். அதில் இந்த சலுகையை எப்படி கண்டறிந்தீர்கள் என்று பல கேள்விகள் கேட்கப்படும். இதைப்போல் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது  மேலும் 30 நபர்களுக்கு share செய்தால் தான் இந்த சலுகையானது வழங்கப்படும் என்று கூறும். இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்பி மற்றவர்களுக்கு  பரப்புவதால் அவர்களின் விவரங்களை பறித்துக்கொள்வதுடன் பல பாதிப்புகளும் ஏற்படுகிறது.

Related image
குறிப்பிட்ட சில நிறுவனங்கள்  தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவதற்க்கு பொய்யான தவல்களை அனுப்புகின்றன. இது போன்ற தகவல்கள் வரும் போது  இணைய முகவரியை மிகவும் கவனமாக பார்க்க வேண்டியது அவசியம். இந்த மாதிரி போலி தகவல்களை பரப்புவதை தடுப்பதற்கு  watsapp-இல் Forward செய்வதில் மாற்றம் செய்து நாள் ஒன்றுக்கு 5 பேருக்கு மட்டும் Forward செய்யும் வசதியானது  வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |