Categories
தேசிய செய்திகள்

whatsApp-ல் விண்ணப்பித்தால்… உடனே கிடைக்கும்…. 2 நிமிடத்தில் உங்கள் கையில் தடுப்பூசி சான்றிதழ்….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு அதற்கான சான்றிதழை வாட்ஸ்அப் மூலமாகவே எளிதில் பெறலாம். 9013151515 என்ற உதவி எண்ணை மொபைலில் சேமித்து, வாட்ஸ் அப்பில் அந்த எண்ணிற்கு certificate என மெசேஜ் அனுப்பவும். அப்போது உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி எண்ணை வாட்ஸ் அப்பில் பதிலாக அனுப்பினால் தடுப்பூசி சான்றிதழ் வாட்ஸ்அப் மூலமாக வரும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே எண்ணில் பதிவு செய்து இருந்தால் அதற்கான ஆப்சன்களும் அதில் இருக்கும்.

Categories

Tech |