உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது வசதிகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் செயலியை பிளே ஸ்டோரில் மட்டும் தரவிறக்கம் செய்யுமாறு அந்நிறுவனத்தின் சிஇஓ கேத்கார்ட் எச்சரித்துள்ளார். வாட்ஸ்ஆப் விட அதிக அம்சங்கள் அடங்கிய ‘ஹே வாட்ஸ்ஆப்’ என்ற போலி செயலி இணையத்தில் கிடைக்கிறது. அதை பயன்படுத்துபவர்களின் போன்களில் உள்ள தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. அந்த செயலியை தடுக்க கூகுளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாராவது அந்த செயலியை பயன்படுத்தினால் எச்சரிக்கவும் என கூறியுள்ளார்.