உலகம் முழுவதும் whatsapp செயலியை பில்லியன் கணக்கான பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். whatsapp செயலில் பயனாளிகளுக்காக புது புது வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இந்த செயலின் பயன்படுத்துவோரின் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் மூலம் இலவசமாக வீடியோ, கால் வாய்ஸ் ஆகியவை மேற்கொள்ளலாம். அத்துடன் வீடியோ, போட்டோ அனுப்பும் முடியும். இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது இதில் இலவசமாக வீடியோ கால், வாய்ஸ் கால் மேற்கொள்வதற்கு பதிலாக தனி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளிலும் அழைப்புகளை இனிமேல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையானது கடந்து 2008 ஆம் ஆண்டு முதல் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் 2016-17 ஆம் ஆண்டு மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தற்போது நீண்ட காலத்திற்கு பிறகு இந்த கோரிக்கைக்கு அதிகமான விளக்கங்கள் தர வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை டாட் நிறுவனம் ஏற்க்கும் போது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுள் டியோ, சிக்னல் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் இலவசமாக வழங்கப்படும் அழைப்புகள் இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதனால் வாடிக்கையாளர்கள் அதிகப்படியான தொகையை செலுத்த முற்படுவார்கள். மேலும் இந்த தகவலால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குயுள்ளாகினர்.