உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதிய பல வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வபோது அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு முன்னதாக சோதனை கட்டமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு அது நிறைவேறியதும் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் அப்டேட் செய்யப்பட்டுள்ள சில அம்சங்களை பயனர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.
அதன்படி முதலாவதாக குழுவில் பயனர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 512 ஆக இருந்த நிலையில் தற்போது 1024 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி வீடியோ காலில் அதிகபட்சமாக 32 பேர் இணைந்து கொள்ள முடியும். அதே சமயம் வாட்ஸ் அப்பில் வாக்கெடுப்பு நடத்திக் கொள்ளும் வசதியும் உள்ளது. குழுக்களை திறம்பட நிர்வகிக்கும் வகையிலான அம்சம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டேப் வைத்திருக்கும் பயனர்களுக்காக தனியாக டேப்லெட் வெர்ஷனை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது.