சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தை பார்த்த பெண் காவலர் கணவர் கொடுத்த பேட்டி தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவம் சாத்தான்குளத்தில் அரங்கேறியது. அங்கு செல்போன் நடத்தி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சாத்தான்குளம் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்குதல் நடத்தினர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைத்த இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததை தொடர்ந்து, இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இந்த சம்பவத்தை விசாரிக்க நீதித்துறை நடுவர் பாரதிதாசனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நியமித்திருந்தது.
அவர் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில் காவலர்களுக்கு கொடூரங்கள் நிகழ்ந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு முன்பு உடலை பார்த்தபோது அதிக அளவு காயங்கள் இருந்தன என்று கூறி இந்த சம்பவத்தை பணியில் இருந்த ஒரு பெண் காவலர் பார்த்ததாகவும், அவர் கொடுத்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட பெண் காவலரின் கணவர் பேட்டியளித்துள்ளார்.
அதில், எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். காவல் நிலையம் சென்ற போது இருவரையும் போலீசார் அடித்து கொண்டிருந்தனர். சம்பவத்தின்போது பணியில் இருந்ததால் தனக்கு பிரச்சினை வரும் என கூறினார். 10 மணி அளவில் போனில் பேசியபோது இருவரையும் போலீசார் அடித்து கொண்டிருப்பதாக கூறினார். எனது மனைவிக்கும் தைரியம் கூறி அழைத்துச் சென்றேன் என்று கூறினார்.
இதுகுறித்து பெண்காவலரின் கணவர் கூறும் போது, தந்தையையும், மகனையும் கூட்டிவந்து என் கண்ணு முன்னால அடிச்சாங்க. எனக்கு ரொம்ப பாவமா இருந்துச்சு. அவங்க அப்பா என் கிட்ட வந்து தண்ணி குடிக்க கேட்டாங்க… தண்ணீர் கொடுத்த அப்புறம் நைட் 11, 12 மணிக்கு மறுபடியும் திருப்பி அடிச்சாங்க… ஒரே ரத்தமாக மாறியது என்று என்னிடம் என் மனைவி கூறினார்.
பின்னர் வீட்டுக்கு வந்து இந்த சம்பவம் நடக்கும் போது நான் அங்கே இருந்தேன். எனக்கு எல்லாம் தெரியும் என்பதால் எனக்கு பிரச்சனை வரும் என்று எனக்கு பயமா இருக்கு என்று என்னிடம் கூறினார். அப்போது நான் கூறினேன் நமக்கு ரெண்டு பொட்ட புள்ள இருக்கு… நாளைக்கு நம்ம பிள்ளைக்கும் இப்படி நடக்கலாம். விசாரணையில் அன்னைக்கு ஸ்டேஷனில் என்ன நடந்ததோ அந்த உண்மையை சொல்லு…
வேலையை விட்டு தூக்குனா நான் சோறு போடுறேன் என்றேன். எதுவுமே தெரியாத என்னுடைய முத்த பொன்னும் அம்மா விசாரணையில் உண்மைய சொல்லிடுங்க என்று கூறினார் என பெண் காவலர் கணவர் கூறியுள்ளார். அதே போல நானும் தைரியமாக இந்த பேட்டியை எங்குனாலும் கொடுப்பேன்… ஆனா எங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்… எங்க குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சம்பவத்தை நேரில் பார்த்த பெண் காவலரின் கணவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், அதே நேரத்தில் உண்மையை எடுத்துரைத்த பெண் காவலரின் குடும்பத்திற்கு நீதிமன்றம் சொன்னது போல உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது தமிழக மக்களின் கருத்தாக இருக்கின்றது.