அதிகாரம் வேண்டுமானால் பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று புதுவை முதல்வர் எச்சரித்துள்ளார்.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், CAA சட்டத்தை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளம் இந்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்கள்.
பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் மாண்புமிகு முதலமைச்சர் நிதிஷ்குமார் NRC_யை எந்த காலத்திலும் பீகார் மாநிலத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அங்கு பாஜக துணை முதல்வர் பொறுப்பு வகிக்கின்றது.
உண்மையிலேயே அவர்கள் கட்சி கொள்கையில் உறுதியாக இருந்தால் கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும். பதவியும் , அதிகாரமும் பாரதிய ஜனதா கட்சிக்கு வேண்டுமானாலும் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கலவரத்தை உருவாக்குவார்கள். குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு இந்து சமுதாயத்திற்கு எதிராக தூண்டுவார்கள். ஆர்எஸ்எஸின் வேலையை பாரதிய ஜனதா கட்சி முழுமையாக செய்து கொண்டிருக்கின்றது.
எனவே தான் நாமெல்லாம் ஒற்றுமை ஆக இருக்க வேண்டிய காலம் இது. நம்மை பொறுத்த வரை தென் மாநிலங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள். மதத்தின் பேரால் தமிழக மக்களை பிரித்துவிட முடியாது. வடமாநிலங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத ஒற்றுமைக்காக நாம் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்போம் என்று நாராயணசாமி தெரிவித்தார்.