Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“எந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிஷ்டம்”…. முழு ராசிபலன் இதோ..!!

மேஷ ராசி அன்பர்களே..!! இன்று மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். உறவினர் நண்பர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். பணபரிவர்த்தனை இன்று சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்துக்கள் வாங்க கூடும்.

உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். மனதில் இருந்து வந்த இனம் புரியாத வேதனை மாறும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். தொழில் சிறப்பாகவே இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். இன்று மாணவ கண்மணிகளுக்கு வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கு. விளையாட்டுத் துறையில் ஆர்வம் செல்லும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த உணவை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று மனதில் மகிழ்ச்சி இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் விரும்பி கேட்ட பொருள்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு திருப்திகரமாக நடத்துவீர்கள். சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். சிலர் அதிகாரிகள் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு மிகுந்த முயற்சிக்குப் பின்னர் வேலை கிடைக்கும்.

இன்று வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்ல நேரிடும். குடும்பத்தாருடன் ஒன்று சேருவீர்கள். வியாபாரிகள் செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் இன்று கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கு உண்டான வேலைகளை இப்பொழுது செய்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். இன்று மாணவர்கள் மட்டும் கொஞ்சம் விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடங்களை படிப்பது சிறப்பு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று சிலர் உங்களுக்கு தந்த வாக்குறுதிகளை மீறி நீங்கள் நடக்கக்கூடும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் தான் இருக்கும். உணவு பொருட்களை தயவுசெய்து தரம் அறிந்து உண்ணுங்கள். தாயின் அன்பும் ஆசையும் மனதில் நம்பிக்கையை கொடுக்கும். இன்றைக்கு அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.

மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்த படுவீர்கள். மேல் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் இன்று கிடைத்தாலும், அதே நேரத்தில் நீங்கள் கொஞ்சம் விழிப்புடன் செயல்படுங்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் வளப்படும். சகோதரர் வழியிலும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சொல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால், எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

கடக ராசி அன்பர்களே…!! இன்று பொது இடங்களில் நிதானத்துடன் பேசவேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். பொது பந்தயத்தில் ஈடுபடவேண்டாம். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்க உதவும். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். இன்று ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்கு உண்டான பாதைகளை நீங்கள் வகுப்பீர்கள்.

அதேவேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். காரியத்தில் அனுகூலம் ஏற்படும். செய்யும் முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருக்கு. முயற்சியின் பேரில் சில முக்கியமான பணியை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி, செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

சிம்ம ராசி அன்பர்களே..!!!  இன்று உங்களின் நல்ல குணங்களை பலரும் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் தேவையான அபிவிருத்தி பணி புரிவீர்கள். வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். நிர்வாகத் திறமையும் தெளிவான சிந்தனையும் மேலோங்கும். எதையும் எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள்.

அனைவரையும் சமமாகவே பாவிப்பீர்கள. அனைவரிடமும் அன்பும் செலுத்துவீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். இன்றைய நாள் உங்களுக்கு ஓரளவு சிறப்பை கொடுக்கும். முடிந்தால் இன்றைக்கு ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதி ஆகவே காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் சற்று குறைவாகத்தான் இருக்கும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகமாகவே காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த உணவை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று வாழ்வில் முன்னேற்றம் பெறுவதற்கு அனுபவம் நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிதானமான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. சுமாரான அளவில் பணவரவு இருக்கும். கண்களின் பாதுகாப்பில் உரிய கவனம் வேண்டும். இன்று தொழில் நிமித்தமாக சில தூர தேச பயணம் மேற்கொள்வீர்கள். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டும். வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமாக அமையும்.

கலைஞர்களுக்கு தடங்கலின்றி புதிய வாய்ப்புகளை பெறக்கூடும். புகழ் பாராட்டு வந்து சேரும். இன்றைய நாள் மனம் மகிழ்ச்சி கொள்ளும் நாளாகவே இருக்கும். அதே போல வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது மட்டும் ரொம்ப பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். இன்று சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால், எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி, செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று உறவினர்கள் அன்பு பாசத்துடன் உங்களை அணுகுவார்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெரும். பண வரவிற்கு திருப்திகரமான நிலை உண்டாகும். காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். சுப நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். இன்று பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்கான செலவு செய்வீர்கள். வாகன திருப்தி ஏற்படும். இன்று வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும்பொழுது ரொம்ப கவனமாக செயல்படுங்கள்.

உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை இன்று அடையக்கூடும். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழல் நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் கடினமாக உழையுங்கள். உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

விளையாட்டை மட்டும் ஏறக்கட்டி விட்டு பாடங்களை படிப்பது சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால், எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகள் நிறைவேற முன்னேற்பாடு அவசியம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரிசெய்வீர்கள். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சிகளை பெறுவார்கள். இன்று பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாகவே நடந்து முடியும். கையிருப்பும் இருக்கும்.

ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் கொஞ்சம் கவனமாக படியுங்கள். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது ரொம்ப கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். இன்று ஆதாயம் உங்களுக்கு ஓரளவு சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செலவை மட்டும் நீங்கள் கட்டுப்படுத்தி விடுங்கள் அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில்  இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை  காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் காணப்படும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்டநிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று எதிர்கால வாழ்வில் நம்பிக்கை ஒளிரும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். உபரி பண வரவில் முக்கியத் தேவைக்கு கொஞ்சம் சேமிப்பீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று மாணவர்கள் கல்வி பற்றிய பயத்தை விளக்கிவிட்டு ஆர்வமாக படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் கவனமாக செயல்படுவது எப்போதுமே நல்லது.

கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளை பெறுவீர்கள் .எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இன்றையநாள் உள்ளம் மகிழும் நாளாக இருக்கும். வெளியூர் பயணம் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாகவும் நிதானமாகவும் செல்லுங்கள். அதாவது பொருட்களின் மீது ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடைஅணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். செயல்களில் நேர்த்தியும் வசீகரமும் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் செழித்து வளரும். பணவரவு சிறப்பாக இருக்கும். பணபரிவர்த்தனை நன்றாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் விலகி செல்லும். இன்று நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.

தடை பட்ட காரியத்தில் இருந்த தடை நீங்கும். செல்வமும் செல்வாக்கும் உங்களுக்கு கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்களுடைய பொறுமையும் நிதானமும் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். திருமண முயற்சிகளை இன்று நீங்கள் மேற்கொள்ளுங்கள். அனைத்துமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்

கும்பம் ராசி அன்பர்களே…!!  இன்று உங்களை புகழ்ந்து பேசுபவரிடம் கொஞ்சம் நிதானமாகவே பழகுங்கள்.  தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிக உழைப்பு அவசியம்.  புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம்.  வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.  இன்று அடுத்தவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி செயல்படுவீர்கள்.  உங்கள் உழைப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள்.

நன்மைகள் அதிகமாகவே இன்று கிடைக்கும்.   பணப் புழக்கம் அதிகரிக்கும் எடுத்த காரியம் அனைத்துமே வெற்றிகரமாக முடியும்.  மதிப்பும் மரியாதையும் சிறப்பாகவே இருக்கும்.  சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள்.  உங்களுடைய வசீகர பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும்.  இன்று மாணவக் கண்மணிகள் விளையாட்டை ஏற கட்டிவிட்டு பாடங்களில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.  பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷடத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள்.  உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்லபடியாக இருப்பீர்கள்.

உங்களுக்ககான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

மீனம் ராசி அன்பர்களே…!!  சில அவசர பணிகள் உருவாகி உங்களுக்கு தொந்தரவை கொடுக்கலாம்.  அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேசவேண்டாம்.  தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணி புரிவது அவசியம்.  பணவரவு எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றும்.  மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் பயிற்சி வேண்டும். செல்வாக்கு இன்று ஓங்கும் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும் தம்பதிகளுக்கு இடையே அன்பு மேலோங்கும்.

மனைவி வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும்.  பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும் நல்ல வரன் அமையும்.  வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கக் கூடிய சூழலும் இருக்கும்.  தொலைதூரத் தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். காதலர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும்.  செயல்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும் அனைவரின் ஆதரவும் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் நீங்களும் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய யோகமும் இன்னிக்கு இருக்கும்.  இன்று முக்கியமான பணியை மட்டும் நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.  சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷடத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள்.  உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷடமான திசை : மேற்கு

அதிர்ஷட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |