சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தினம்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும். இல்லனா தூக்கமே வராது அவருக்கு. முதல்ல ஒருவாரம் இந்த ஆட்சி ஆட்சி தாங்காது, ஒரு மாசம் தாங்காது, ஆறு மாசம் தாங்காது, ஒரு வருஷம் தாங்காதுன்னு சொன்னாங்க.
இப்போ மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காவது ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.அரசு எல்லா துறையிலுமே நாங்க சாதனை படைத்துக் கொண்டிருக்கும். தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டு இருக்கின்றோம்.
வேண்டுமென்றே திட்டமிட்டு தினம் தினம் ஏதாவது ஒரு அறிக்கை… பத்திரிக்கை வாயிலாக, ஊடகம் வாயிலாக விடுகின்றார். ரூம்ல இருந்துகிட்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். வெளிய போக மாட்டேன்கிறாரு. எங்கேயாவது வெளியே வந்திருக்கிறாரா ?
ரூம்ல உட்கார்ந்து இருக்கும்போது கூட கையில் உறை போட்டுக் கொண்டு, கண்ணாடி போட்டுக் கொண்டு தான் பாத்துட்டு இருக்காரு. அங்க என்ன வைரஸா வரபோகுது ? அவர் ஒருத்தர்தான் தனியா இருக்காரு. இங்க கூட எல்லாரும் இருக்கிறோம். நாட்டு மக்களுக்கு உழைக்க கூடிய ஒரே இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.