Categories
தேசிய செய்திகள்

”யாரை பார்த்து என்ன சொல்லுறது” கொதித்தெழுந்த கேரள கம்யூனிஸ்ட் ….!!

கேரள அரசின் தலைமைச் செயலாளர் மாவோயிஸ்ட்டுகளைத் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்ட்டுகளைத் பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் அடிப்படை மனித உரிமைகளுக்குக் கூட தகுதியற்றவர்கள் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கனம் ராஜேந்திரன், அவரின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு என்றும், ஆளும் அரசு அறியாமல் இந்த கருத்தை அவர் தெரிவித்திருந்தால் அதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Image result for Tom Jose, Chief Secretary, Government of Kerala

தனியார் தினசரி செய்தித்தாளில் “இது போர் போன்றது: கொல்லுங்கள் அல்லது கொல்லப்பட வேண்டும்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில், “மாவோயிஸ்ட்டுகளைத் பயங்கரவாதி என்று கூறுவதே சரியானதாக இருக்கும். இவர்கள் மீது அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் நியாயமானது. இவர்கள் அடிப்படை மனித உரிமைகளுக்குக் கூட தகுதியற்றவர்கள்” என்று அவர் எழுதியிருந்தார்.

Image result for Kanam Rajendran, Secretary of the Communist Party of India

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், இப்படி எதற்குமே பொருந்தாத ஒரு கட்டுரையை கேரள அரசின் தலைமைச் செயலாளர் எப்படி எழுதினார் என்றே தெரியவில்லை. நாங்கள் மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாடுகளை ஆதரிக்கவில்லை.ஆனால் அவர்களைச் சுடுவதற்கான உரிமையைச் சட்ட அமலாக்க முகமைகளுக்கு யார் வழங்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது நீதிமன்ற அவமதிப்பாகும். கேரள அரசு அறியாமல் இவர் இந்த கருத்தைப் பதிந்திருந்தால், அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |