Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னத்தை சொல்ல…! 2வருஷம் ஆக போகுது… ADMK மட்டும் இருந்துச்சுன்னா…! மோடிகிட்ட பேசி முடிச்சு இருப்போம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார், கூடிய விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார், நம்புவோம், அதுதான் எங்களுடைய கருத்து.  நாங்கள் இருந்திருந்தால் நிச்சயமாக இந்நேரம் எய்ம்ஸ்  மருத்துவமனை உருவாக்கி இருப்பார் எங்களுடைய முதலமைச்சர்.

மத்திய அமைச்சருடன் தொடர்பு கொண்டு, பாரத பிரதமருடன் தொடர்பு கொண்டு, நிச்சயமாக நிதியைப் பெற்று வாங்கிருப்பார்கள். இப்ப கூட பாருங்கள், நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு மிக பெரிய பின் தங்கிய நிலை. கடந்த ஆண்டு விட மோசமாய் போய்விட்டது. காரணம் என்னவென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் தான். நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என்று மாணவர்களிடம் சொல்லி, மாணவர்கள் இதனால் அடிக்கடி குழப்பம் ஆகி,

நீட் ரத்தாகிவிடும் என்று மாணவர்கள் மனதில் எண்ணி, சரி ரத்து ஆகப்போகுது என்று, ஒரு சில மாணவர்கள் –  மாணவிகள் எண்ணியதன்  அடிப்படையில் தான், இன்றைக்கு நீட் தேர்வில் நாம் பின்தங்கி இருக்கிறோம். நீட் தேர்வுக்கு நாங்கள் எல்லா வகையான முயற்சியும் செய்திருக்கிறோம், நீங்களும் செய்யுங்கள், நாங்கள் உதவி செய்கிறோம், முயற்சிக்கிறோம் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் என்ன சொன்னார்கள் ? ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து, நீட் தேர்வு ரத்து என்று சொன்னார்களா?

இல்லையா ?முதலமைச்சராக இருக்கின்ற,  அன்று எதிர்கட்சி தலைவராக இருந்தவரும் சொன்னார், உதயநிதி சொன்னார், கனிமொழி சொன்னார், எல்லோரும் சொன்னார்கள். உங்களுக்கே தெரியும். இன்றைக்கு செய்துவிட்டார்களா? வருடம் இரண்டாகப் போகிறது. இதனால் தான் நீட் தேர்வில் மாணவர்கள் பாதிப்படைந்ததற்கு காரணம் என்று நினைக்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |