தொகுப்பாளினி டிடிக்காக பிரபல நடிகர் நொடிப்பொழுதில் செய்த விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்ப்பார்கள். சமீபகாலமாக இவர் குறைந்த அளவு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். ஆர் .ஆர் .ஆர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை சமீபத்தில் தொகுத்து வழங்கியிருந்தார்.
https://www.instagram.com/p/CZwb4cTPGL7/
இதனையடுத்து, விக்ரம் நடிக்கும் ‘மகான்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்கியுள்ளார். விக்ரம், துரு விக்ரம், பாபி சிம்ஹா என பலரைப் பேட்டி எடுத்துள்ளார். அப்போது, திவ்யதர்ஷினி பிரபல நடிகர் விக்ரமிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். துளியும் யோசிக்காத விக்ரம் டிடிக்கு ஏற்ற சட்டையை மாற்றி புகைப்படம் எடுத்தாராம். இதனை டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.