Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!…. ஷாருக் வீட்டில் வைரத்தில் பெயர் பலகையா….? அதுவும் ரூ. 35 லட்சத்துக்கு…. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிக்க, பிரியாமணி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அதன் பிறகு விஜய் சேதுபதி வில்லனாக, நடிக்க நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் வீட்டில் வைத்திருக்கும் பெயர் பலகை குறித்த ஒரு தகவல் வலைதளத்தில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.

அதாவது மும்பையில் நடிகர் ஷாருக்கான் வசித்து வரும் வீட்டிற்கு மன்னத் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையை தற்போது ஷாருக்கானின் மனைவி கௌரி கான் புதுப்பித்துள்ளார். அதோடு வீட்டின் பெயர் பலகைக்கு பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் கௌரி கான் வீட்டின் பெயர் பலகையில் வைரக்கற்களை பதித்துள்ளார் என்றும், அதற்காக சுமார் 35 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார் என்றும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |