தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்று இருந்த இவர்கள் தங்களது புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இதனிடையே அண்மையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்து இருப்பதாக விக்கி மற்றும் நயன் தம்பதி அறிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமணம் முடிந்த நான்கே மாதங்களில் எப்படி குழந்தை பிறந்திருக்க முடியும் என பல கேள்விகளும் இருந்த நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சைகளும் இழந்த நிலையில் நயன் மற்றும் விக்கி தம்பதியினர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள கடந்த டிசம்பர் மாதம் பதிவு செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் தன்னுடைய மகன் தன் மீது சிறுநீர் கழித்த புகைப்படம் ஒன்றை விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், என் கனவு நனவாகியுள்ளது. இது என் மகன் என் மீது காட்டிய அன்பு என பதிவிட்டுள்ளார்.மேலும் ஆனந்த யாழை மீட்டுகிறாள் என்ற பாடலை இந்த பதிவுக்கு பேக்ரவுண்ட் பாடலாக பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.