Categories
அரசியல் தேசிய செய்திகள்

நிதிஷ் குமார் ராஜினாமாவின் ரகசியம் என்ன ? வெளியாகிய பரபரப்பு தகவல் ..!!

பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, நிதிஷ்குமார் காங்கிரஸ், தேஜஸ்வியுடன் கூட்டணி அமைச்சர் புதிய அரசை அமைக்க இருக்கின்றார். இந்த அரசியல் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர், எப்போதும் மோடி – அமிதா காம்போ பிஜேபியை எடுத்தார்களா,  அப்போதிலிருந்து நிதிஷ்குமாருக்கு பிரச்சனை தான். 2014இல் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் போது எதிர்த்தவர் நிதிஷ்குமார்.

பீகாரில் தனித்து போட்டி:

அதனால அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி பீகார்ல தனித்துப் போட்டியிட்டார். அந்த நேரத்தில் மொத்தம் இருக்கின்ற 40 தொகுதிகளில் பிஜேபி கூட்டணி 31 தொகுதிகளில் வென்றது. நிதீஷ்குமார் 2இடங்களில் மட்டும் வெற்றி பெற்றார். அதற்கு பிறகு அந்த தோல்விக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் 2015ல் தன்னுடைய பிரதான அரசியல் எதிரியான லாலுவோடு கைகோர்த்தார்.

ஊழல் குற்றசாட்டு:

அப்போ வந்து மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் நித்திஷ் – லாலுவின் கூட்டணி 176 சீட்டு ஜெயித்தது. ஆனால் தேஜஸ்வி யாதவின்  தொல்லையை தாங்க முடியவில்லை. ஏனென்றால் நிதிஷ்குமாரிடம் ஒரு விஷயம் பார்க்க வேண்டும்.அவர் எப்படி இருந்தாலும் ? அவர் மீது இதுவரைக்கும் ஊழல், லஞ்சம் எந்த விதமான குற்றச்சாட்டும் இருந்தது கிடையாது.

தேஜஸ்வி யாதவ்:

சிறந்த நிர்வாகி என்று பெயரிடத்தவர். ஊழல் குற்றச்சாட்டு,  லஞ்ச குற்றசாட்டு இல்லை என்கின்ற ஒரே ஒரு காரணம் தான் அவரை மோடியோடு இணைக்கக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் மோடிக்கு இணையான ஒரு பிரைம் மினிஸ்டர் வேட்பாளராக கொண்டு வரணும்னு சொல்லுவதற்கு அடிப்படை காரணமே இருக்கிறது இந்த ஒரு காரணம்தான். அவரால் தேஜஸ்வி யாதவை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் உள்ள வந்தது தேஜஸ்வி யாதவ்  வழக்கம் போல அவர்களின் விளையாட்டை ஆரம்பிச்சுட்டாங்க.

பாஜக அனுமதிக்காது:

நிதிஷ்குமார்  மாநில அரசியலை விட்டுட்டு நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் எடுத்து,  தேசிய அரசியலுக்கு நகரலாம். தேசிய அரசியலுக்கு இவர் 2024 தேர்தலை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம்.  இரண்டாவது இன்னொரு கணக்கு ஒன்னு இருக்கு. 2024ல திட்டவட்டமாக இப்படியே இந்த கூட்டணி போச்சுன்னா… நிச்சயமாக பீகாரை பொருத்தவரையில் பிஜேபி மிகச் சிறப்பாக வெற்றியை பெரும். 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிஜேபி,  தன்னை முதல்வராக தொடர அனுமதிக்காது என்பது நிதிஷ்குமாருக்கு கருத்து.

எக்நாத் ஷிண்டே:

இப்போது நிதிஷ்குமார் கட்சியில் இருந்து விலகிய ஆர்.சி.பிசிங்கை பீகாரின் எக்நாத் ஷிண்டேவாக  அமித்ஷா வளர்த்து வருகிறாரோ என்ற  ஐயம் இருந்தது. இந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலிலிலேயே கூடவே ஜூனியர் பார்டியாக இருந்த,  பிஜேபி 75 சீட்டும்,  நிதிஷ்குமார் உடைய கட்சி 43 சீட்டும் தான் ஜெயிச்சது. இது எப்படி மகாராஷ்டிராவில் ஜூனியர் பார்ட்னராக இருந்த பிஜேபி ரொம்ப எமர்ஜாயி இன்னைக்கு எந்த கட்சிக்கு சிவசேனை ஆளானது. அதனால இப்போ நிதீஷ் குமாருக்கு இருக்கும் பிரச்சனை என்பது..  அவர் தேசிய அரசியலில் ரோல் பிளே பண்றாரா ? இல்லையாங்குறத தாண்டி அவருடைய கட்சியினுடைய எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டியிருக்கின்றது.

Categories

Tech |