டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு விட்டது என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை செயலாளர் சண்முகம், கொரோனா பரிசோதனையை மிகவும் தீவிரப்படுத்த வேண்டும். நாம் செய்தது பி.சி.ஆர் டெஸ்ட் தான் . பி.சி.ஆர் டெஸ்ட் செய்வதற்கு 15,000 கிட்டுகள் நம்மிடம் இருக்கின்றது. அதனால் சோதனை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தனிமையில், கண்காணிப்பில் உள்ளவர்களை சோதனை நடத்த தேவையான பி.சி.ஆர் கருவிகள் நம்மிடம் உள்ளது.ரேபிட் கிட் சோதனை கருவிகள் வர தாமதமானாலும், தமிழகத்தில் தடையின்றி பரிசோதனைகள் நடைபெறுகிறது.
ஒரு மாநிலத்தில் மட்டும் ஊரடங்கு அமல் படுத்துவது பயனளிக்காது, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தினால் மட்டுமே பயனளிக்கும். தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவருக்குமே சோதனை செய்யப்பட்டு விட்டது. இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 58 பேரில் 4 நாலு பேருக்கு வெளியே சென்ற தொடர்பு உள்ளது. மீதம் உள்ள அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள்.
பின்னர் கொரோனா தொற்றின் வீரியம் அதிகமாக இருப்பதனால்தான் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களின் பேச அனுமதிக்கவில்லை என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அப்படி ஏதும் கிடையாது, அவுங்களுக்கு சுகாதாரத்துறை குறித்து நல்ல புரிதல் உண்டு.நான் தலைமை செயலாளர் என்ற முறையில், கொரோனா குறித்து நடைபெறும் பல்வேறு துறையின் பணிகளையும் சேர்த்து பேச வேண்டும், அதன் விவரங்களை கொடுக்க வேண்டும் என்று தான் நான் பேசுகின்றேன்.
ஹெல்த் டிபார்ட்மெண்ட்டின் முழு தகவல், கொரோனாவின் வீரியம் தொடர்பாக அவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லுவார்கள். அனைத்து துறைகளின் முழு தகவல் கொடுக்கணும்னா நான் பேசுறேன் என்று தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திக்காமல் தலைமை செயலாளர் சந்தித்தது குறித்து எழுந்த பல்வேறு வதந்திகளுக்கு தலைமை செயலாளர் சண்முகம் முற்றுப்புள்ளி வைத்தார்.