ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 1,800 கிலோ அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்து வரும் நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சிநாதன் தலைமையில் காவல்துறையினர் கமுதியை அடுத்துள்ள பள்ளபச்சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அப்போது அப்பகுதி வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது வாகனத்தில் 1.800 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதனையடுத்து அரிசியை கடத்தி செல்ல முயன்ற பள்ளபச்சேரியை சேர்ந்த பஞ்சவர்ணம்(46), பரமக்குடியை சேர்ந்த மணி(41) ஆகிய 2 பேரை கைது செய்து ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்துள்ளனர்.