கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, 23ஆம் தேதி அதிகாலை உக்கடம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அருகில் ஒரு மாருதி 800 வாகனத்தில் இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் ஒரு சில டிரம்ஸ் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த வாகனம், கோவிலுக்கு அருகில் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த உக்கடம் பகுதியை சேர்ந்த முபின் என்ற நபர் சம்பவ இடத்திலே தீக்காயங்களுடன் இறந்தார்.
அதன் தொடர்ச்சியாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ் உக்கடம் ரேஞ்ச் புலன் விசாரணையை மேற்கொண்டு உடனடியாக அந்தப் பகுதி காவல்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, தடயங்களை பாதுகாத்து, தடையவியல் வல்லுனர்களை வரவழைத்து, கைரேகை பிரிவு, மோப்பநாய் பிரிவு ஆகிய அறிவியல் பூர்வமாக அனைத்து புலன் விசாரணை நடவடிக்கைகள் எடுத்து அந்த நபர் யார் ? என்பது 12 மணி நேரத்தில் கண்டுபிடித்து, அவர் யார் என்ற அடையாளம் தெரிந்து,
அந்த மாருதி 800 வாகனம் 10 கைகள் தாண்டி வந்திருக்கிறது. அந்த 10 பேரையும் உடனடியாக கண்டுபிடித்து, அன்று மாலைக்குள் கார் எங்கிருந்து வந்தது என்ற விவரத்தையும் ? இறந்தவர் யார் என்ற விபரத்தையும் தெரிந்து கொண்டு உடனடியாக அந்த நபரின் உடைய வீட்டை நீதிமன்றத்திற்கு தகவல் அளித்து உடனடியாக சோதனை செய்து சோதனையில் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அதை நீதிமன்றத்திற்கும் அனுப்பியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக புலன்விசாரணை நடைபெற்று வந்தது. அசிஸ்டன்ட் கமிஷனர் சீப் இன்வெஸ்டிகேட் ஆபிஸராகவும், அவருக்கு உதவி செய்ய 6 இன்ஸ்பெக்டர்கள் செயல்பட்டு வந்தனர். டெப்டி கமிஷனர் ரேங்கில் உள்ள அதிகாரி மற்றும் நான் சூப்பர்வைஸ் செய்து கொண்டிருந்தேன். சம்பவ இடத்திற்கு ஏடிஜிபி, டிஜிபி அவர்களும் வந்து சம்பவ இடத்தை பார்த்தார்கள். இந்த புலன் விசாரணையின் அடிப்படையில் ஐந்து நபர்களை கைது செய்துள்ளோம். இது பற்றிய விபரம் ஏற்கனவே பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்தவுடன் புலன்விசாரணையின் அடிப்படையில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்ட சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டு, இப்பொழுது UAPA-வாக மாற்றி புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வழக்கு பதிவு செய்த போது 174, 3A சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இது தொடர்பான குற்றவாளிகள் கைது செய்த பின்பு A1 அக்யூஸ்ட் இறந்து போனது ஜமேசா முபின் என்றும், அதன் தொடர்ச்சியாக 5 குற்றவாளிகள் அதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்து, கைது செய்த பின்பு,
அவர்களுடைய கூட்டு சதியை தெரிந்துகொண்டு, கூட்டு சதிக்கான 120B, பிரிவினர்களுக்கிடையே ஒரு விரோதத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த செயல் இருந்ததற்காக 153A பிரிவு IPC, அதே போல UAPA வெடிபொருட்கள் பயன்படுத்தி, வெடிக்கப்பட்டதால் UAPA சட்டத்தையும் பயன்படுத்தி, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.