மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முன்பே சிகிச்சை அளித்திருந்தால் மாலை 9.45 மணிக்கு ஜெயலலிதா மயங்கி விழுந்திருக்க மாட்டார், அதை தவிர்த்து இருக்கலாம் எனவும் ஆணையம் சொல்லியிருக்கிறது.இவ்வாறான தவிர்த்து இருக்கக்கூடிய நிலையில் தான் ஜெயலலிதா மயங்கி விழுந்துள்ளார் என சாட்சியங்களும் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மறைந்த முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவு இல்லாமல் தான் இருந்திருக்கிறார்.
அதற்கு பின்பாக மருத்துவமனைக்கு உள்ளே சென்றபோது அவருக்கு அடிப்படை சிகிச்சைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிகிச்சை கொடுக்கப்பட்டதற்கு பின்பாகத்தான் பாதுகாவலர் வீர பெருமாள், ராம்மோகன் ராவ் வந்திருக்கிறார். சற்று நேரம் கழித்து சுயநினைவுக்கு வந்ததற்கு பின்பாக, மீண்டும் தூக்கத்தில் தான் இருந்திருக்கிறார்.
அப்பொழுது அவருக்கு பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை மருத்துவர் கண்டறிந்து இருக்கிறார்கள். குறிப்பாக பாக்டீரியா என்பது கண்டறியப்பட்டு இருக்கிறது, அவருக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டதை உறுதி செய்து இருக்கிறார்கள். ஆனால் இதய பிரச்சனை இருந்ததை அடையாளம் கண்டு அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் தவறி இருக்கிறார்கள்… அதாவது 27 ஆம் தேதி தவறப்பட்டிருக்கிறது என்பதை ஆணையம் சுட்டிக்காட்டி இருக்கிறது.
இதே போல வெஜிடேசினால் அவதிப்பட்டு இருக்கின்ற ஜெயலலிதா, இதற்கு ஆரம்பகால அறுவை சிகிச்சை அறிகுறிகள் அவருக்கு இருந்திருக்கிறது, அப்பொழுதும் அவருக்கு அந்த அறுவை சிகிச்சைகள் எதுவும் செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் டாக்டர் சிவக்குமார், ரிச்சர்ட் பீலே இருவருமே வெளிநாட்டு சிகிச்சைக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையில், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை ? எனவும் ஆணையம் கேள்வி எழுப்பு இருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவ குழுவை பொருத்தவரை 5 முறை வந்திருக்கிறார்கள். மருத்துவர்கள் அளித்த சிகிச்சைகளை மட்டுமே…. அப்பல்லோ மருத்துவர்கள் என்ன சிகிச்சை அளித்திருக்கிறார்களோ அதை மட்டுமே கண்காணித்திருக்கிறார்களே தவிர, எய்ம்ஸ் மருத்துவர்கள் எந்த சிகிச்சையோ, மருத்துவ பரிந்துரையோ அளிக்கவில்லை என்பதை ஆணையம் உறுதிப்பட தெரிவித்து இருக்கிறது. 07.10.2016அன்று டிரெக்சோ வாம்மிங் செய்யப்பட்டபோது, வழக்கமாக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களுக்கு குணமாக்கப்பட்டிருக்கிறது என சொல்லப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர்களும் கூட ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் கண்காணித்தார்களே தவிர, சிகிச்சையோ மருத்துவ பரிந்துரையோ அளிக்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். முழு முக்கியமாக ஜெயலலிதாவின் உடல் பின்னடைவு 22ஆம் தேதி அன்று ஏற்பட்டிருந்தாலும்,
அதற்கு முன்பாகவே அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது வெறும் பாராசிட்டமல் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்று இருந்தால், 22 ஆம் தேதி இரவு அவர் மயக்கம் அடைந்து விழுந்திருக்க மாட்டார். இது போன்ற உடல் பின்னடைவு ஏற்பட்டிருக்காது என்று ஆணையம் சுட்டிக்காட்டுகிறது.