Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு என்ன மிகப்பெரிய விஞ்ஞானியா ? ஸ்டாலின் பண்ணுறது ரொம்ப தப்பு ..!!

முக.ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது என முதல்வர் தெரிவித்துள்ளார்.

நேற்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டு, இடைக்கால ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டார். இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசை கண்டித்து அறிக்கை விட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கட்சியை சேர்ந்த ஆர் எஸ் பாரதி என்பவரை இன்றைக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்காக என் மீதும், அரசு மீதும் குற்றம் சாட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வேடிக்கையாக இருக்கிறது.

பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக ஆதி தமிழ் மக்கள் அமைப்பை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.காவல்துறையையின் சட்டத்தின் வாயிலாக தான் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கும் , அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம் செய்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இப்படி ஒரு பொய்யான  தகவலை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பரப்பி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு தனிப்பட்ட நபர், ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர், இழிவுபடுத்தி பேசுகிற பொழுது அவர் புகார் செய்கிறார், அந்த புகார் அடிப்படையிலே காவல்துறை சட்டரீதியாக கைது செய்துள்ளது. இதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் ? இதற்கும்  எடப்பாடி பழனிசாமிக்கு என்ன சம்பந்தம் ? இதையெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு அனுதாபத்தை தேடிக் கொள்வதற்காக இந்த கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் இப்படிப்பட்ட இழிவான பேச்சை பேசிய உடனே கண்டித்திருக்க வேண்டும், அதுதான் எதிர்க்கட்சித் தலைவர், அதை விட்டுவிட்டு மற்றவர் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்வது, எந்த விதத்தில் நியாயம் அல்ல என்பதை பொது மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். ஏதோ ஆர் எஸ் பாரதி மிகப்பெரிய விஞ்ஞானி மாதிரியும், அவர் என்னமோ என் மீது புகார் கொடுத்த மாதிரி, அதனால் நாம் கைது செய்ய சொன்னதா அறிக்கை விட்டுள்ளார்.

Categories

Tech |