விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கடந்த 9-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 20 போட்டியாளர்கள் களமிறங்கினர். இந்த நிகழ்ச்சியில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி முத்துவும் பங்கேற்றார்.
ஜி.பி முத்துவுக்காகவே ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். இவருக்கும் தனலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்ட போதெல்லாம் ரசிகர்கள் ஜி.பி முத்துவுக்கு ஆதரவாக இணையதளத்தில் குரல் கொடுத்தனர். கடந்த சில நாட்களாகவே மிகவும் மன வருத்தத்தில் இருந்து ஜிபி முத்து என்னுடைய குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை.
அதனால் நான் வீட்டை விட்டு செல்கிறேன் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவரை பிக்பாஸ் மற்றும் நடிகர் கமல்ஹாசன் சமாதானப்படுத்தி வீட்டில் இருக்கும் படி அறிவுறுத்தினர். இருப்பினும் ஜி.பி முத்து வீட்டை விட்டு கிளம்பி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்து தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை ஜி.பி முத்து இணையதளத்தில் பகிர்ந்தள்ளார். அந்த வீடியோவில் தன்னுடைய மகள் மற்றும் மகனுக்கு ஜிபி முத்து பிரியாணி ஊட்டுகிறார். அப்போது தன்னுடைய மகன் தன்னை பார்க்காமல் மிகவும் மெலிந்து போய்விட்டான் என்றும் கூறுகிறார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.