சாத்தான் என்ன வேதம் ஓதுகிறதா? என பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒருவர் தன்னை குறை கூறி வருவதாக சேரன் வேதனையுடன் தெரிவித்தார்.
இந்திய அளவில் பிரபலமாக நடைபெற்றுக் கொண்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். தற்பொழுது தமிழகத்தில் சீசன் 1 மற்றும் 2ஐ தொடர்ந்து 3 வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற சீசன்களை ஒப்பிடுகையில் மூன்றாவது சீசன் நல்ல டிஆர்பி ரேட்டிங் உடன் அதிக அளவிலான மக்களை கவரும் விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வாரம் முழுவதும் காதல்,சண்டை என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் காணும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, இருக்கையின் நுனியில் பதட்டத்துடன் காண வைக்கிறது எலிமினேஷன் தினமான ஞாயிற்றுக்கிழமை.
ஒவ்வொரு வாரமும் சனி,ஞாயிறு வந்து விட்டால் யார் காப்பாற்றப்படுவார்?யார் வீட்டை விட்டு வெளியேறுவார்? என்ற பதட்டம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடையே மட்டுமல்லாமல் தமிழக மக்களிடம் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வார ஏவிக்ஷனுக்கு தேர்வு செய்யப்பட்ட மீரா ,சேரன், சரவணன், அபிராமி, மோகன் ஆகியோரில் யார் காப்பாற்றப்படுவார்? யார் வெளியேறுவார்? என்ற பதற்றம் நிலவி வருகிறது.
இதைத்தொடர்ந்து 28 ஆம் நாளான இன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன் வீட்டில் இருக்கும் நபர்கள் இடையே பேசுகையில், ஏவிக்ஷனுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 பேர் பற்றி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்றொருவர் தொடர்ந்து குறை கூறி வருகிறார். அவர் யார் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், சாத்தான் என்ன வேதம் ஓதுகிறதா? என்று கூற உடனே சேரன் கை தூக்கி என்னைப் பற்றி தான் இங்கே ஒருவர் இவ்வாறு கூறினார் என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும் காதல் மன்னன் கவினும் கைதட்டலுக்காக தனது நிலையை ஒவ்வொரு முறை மாற்றிக் கொள்கிறான் என்ற ஒரு கருத்தும் பரவி வருவதாக கமலஹாசன் தெரிவித்தார்.