செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரி என்பது….. நீங்கள் மன்னர் ஆட்சி காலத்திற்கு போனாலும், அரசிடம் தான் நிலம் இருக்கும். உழைப்போம், அவர்களுக்கு தேவையானது போக களஞ்சியத்தில் வைத்து சேமிப்போம், பேரிடர் காலங்களில் வேளாண்மை போய்த்துப்போன காலங்களில் மக்களுக்கு திருப்பி கொடுப்போம்.
அப்படித்தான் உலக நாடுகள் எல்லாம் வரியை 100 ரூபாயில் 70 ரூபாய் எடுத்துக் கொண்டாலும் 70 ரூபாய்க்கு இணையானதை திருப்பிக் கொடுக்கிறது. உயர்ந்த கல்வி, உயர்ந்த மருத்துவம், தூய குடிநீர், தடையற்ற மின்சாரம், பயணிக்க சரியான பாதை அப்படியே திருப்பிக் கொடுக்கிறது. அப்படி என் நாடு செய்கிறதா?
நாங்கள் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி பணத்தை நாங்கள் திருப்பி கொடுக்கிறோம். ஏன் இங்கிருந்து எடுத்துகிட்டு போகிற ? ஏன் திருப்பி கொடுக்கிற, உனக்கு வேற வேலை இல்லையா ? நீங்கள் கவர்மெண்ட்டா இல்லை… கந்துவட்டி கடையா? உனக்கு என்ன வேலை ?
என்னிடம் வாங்கிக் கொண்டு அந்த வரியை திருப்பிக் கொடுப்பதற்கு நீங்களே வைத்துக் கொண்டு நன்றாக நிர்வாகம் செய் என சொல்லிட்டு போக வேண்டியது தானே.மத்திய அரசுக்கு எதற்கு நிதி ? நிர்மலா சீதாராமன் என்னுடன் வாதிட வருவார்களா ? என்ன நிர்வாகத்திற்கு நிதி தேவைப்படுகிறது கல்விக்கா ? மருத்துவத்திற்காக ? சாலை போடும் பராமரித்தலுக்கா ? குடிநீர் விநியோகத்திற்காக ? எல்லாமே தனியார்மயம் ஆகிவிட்டது, எதற்கு காசு ?
சொந்தமாக விமானம் வைத்திருக்கிறீர்களா ? ஏர்போர்ட் வைத்துள்ளீர்களா ? என்ன இருக்கு. அதானி ஏர்போர்ட், ஒரே ஒரு இந்தியன் ஏர்லைன்ஸ் டாடா-விடம் வாங்கினீர்கள் அவர்களிடமே விற்று விட்டீர்கள். மத்திய அரசுக்கு என்று நிதி என்று ஒன்று இருக்கிறதா ? மத்திய அரசு தனக்கென்று நிதி வருவாயை பெருக்கிக் கொள்ள ஏதாவது தொழில் ? ஏதாவது வருவாய் பெருக்கிக்கொள்ள ஏதாவது வைத்துள்ளார்களா ? மாநிலங்களின் நிதிதான் மத்திய அரசு நிதி என விமர்சித்தார்.