வெவ்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகைகள் ஒன்றாக சேர்ந்து விளம்பரத்தில் நடித்துள்ளனர்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியின் பூவே உனக்காக, ஜீ தமிழின் செம்பருத்தி, கலர்ஸ் தமிழின் இதயத்தை திருடாதே ஆகிய நான்கு சீரியல்களில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரமான சுஜிதா, சபானா, ராதிகா ப்ரீத்தி, பிந்து ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளனர்.
இப்படி நான்கு சீரியலில் இருக்கும் நடிகைகள் ஒன்று சேர்ந்து விளம்பரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விளம்பரத்தை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விளம்பரம் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.