பிக்பாஸ் போட்டியாளர் பவானி தனது கணவனின் பெயரை பச்சை குத்தியதை இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார்.
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் மற்றும் கஷ்டங்களை பற்றி கூறி வந்தனர்.
அந்த வகையில், பவானி ரெட்டி அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டதை பற்றி கண்கலங்கியபடி பேசினார். அவருடைய கணவர் அவரை குழந்தை போல பார்த்துக் கொள்வார் எனவும் பவானி கூறினார். இந்நிலையில், கணவர் இறந்ததும் அவரை பற்றிய நினைவுகள் இல்லாமல் வாழும் சிலருக்கு மத்தியில், பவானி தன் கணவரின் பெயரை தனது கையில் பச்சை குத்தியுள்ளார். அதை அழிக்கும் வாய்ப்பு இருந்தும், அதை அவர் அழிக்காமல் இன்று வரை வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரது கணவனை அவர் எவ்வளவு நேசிக்கிறார் என கமன்ட் செய்து வருகின்றனர்.