Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சி தொடங்குனா என்ன ? பாஜகவில் சேர்ந்தா என்ன ? அசால்ட் கொடுத்த அழகிரி ….!!

நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கினாலும் அல்லது பாஜகவில் இணைந்தாலும் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்குநேரியில் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் அத்துமீறி நுழையவில்லை. தேர்தலில் நெருக்கடி ஏற்படும்பொழுது அரசு இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறது. மக்களவை உறுப்பினரும் ஒரு கட்சியின் தலைவரும் எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள். அரசு தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.

Image result for கே.எஸ் அழகிரி

ஆளும் கட்சியைப் பொறுத்தவரை தேர்தலில் தனது அதிகார பலத்தையும் பணபலத்தையும் அதிக அளவில் செலவழித்தனர். அவர்களிடம் பணமும் அதிகாரமும்தான் இருந்ததே ஒழிய மக்களுடைய ஆதரவும் விருப்பமும் எங்கள் பக்கம் இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஏராளமான மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Image result for கே.எஸ் அழகிரி

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அவர் பாஜகவில் இணைய வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, பொன். ராதாகிருஷ்ணன் கருத்துக்கு தான் தடையாக இல்லை என்றும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலோ அல்லது பாஜகவில் இணைந்தாலோ தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது எனவும் பதிலளித்தார். மேலும், ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்றார்.

Categories

Tech |