Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மே 3க்கு பின் என்ன ? ”முடிவெடுக்கும் மத்திய அரசு” நாளை அமைச்சரவை கூட்டம் …!!

மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. நாளைய தினம் நடக்க உள்ள இந்த அமைச்சரவை கூட்டம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் பிரதமருக்கு மிக முக்கியமான சில பரிந்துரைகளை இந்தஅமைச்சரவை கூட்டம் வழங்குகிறது. நிதித்துறை, உள்துறை, வர்த்தகத் துறை, பொதுப் போக்குவரத்து துறை, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து என முக்கிய துறைகளின் அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது துறையில் என்னென்ன மாதிரியான தளர்வுகள் கொடுக்கப்படவேண்டும்என்ற ஆலோசனையை வழங்க இருக்கின்றனர்.

முக்கியமாக தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்தில் இருந்து சிறு குறு தொழில் சார்ந்த விலக்குகள் என்பது கட்டாயம் இருக்கும் என்று தெரிகின்றது. ஏற்றுமதி இறக்குமதி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதி அமைச்சகத்தின் சார்பில் சில அறிவுறுத்தல் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. முழுஅடைப்பு என்பது நீக்கப் பட்டாலும் கூட முக்கியமான தளர்வுகள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற ஒரு முக்கிய அம்சங்களை அமைச்சரவை  கூட்டத்தில் ஆலோசித்து பிரதமருக்கு கொடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

Categories

Tech |