18 வயதுக்கு கீழ் இருந்தாலும் பருவமடைந்த நிலையில் தனக்கு விருப்பமானவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முஸ்லீம் தனிநபர் சட்டங்களின் கீழ் பருவமடைந்த ஒரு பெண் 18 வயதுக்கு கீழ் இருந்தாலும் தனக்கு விருப்பமானவரை திருமணம் செய்து கொள்ள உரிமை இருப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 36 வயது ஆணும், 17 வயது பெண்ணும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளனர் என்றும், அவர்களுக்கு உறவினர்களால் ஆபத்து உள்ளதால் தங்கள் உயிருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய சட்டங்களின் கீழ், பருவமடைதலும், வயதுக்கு வருதலும் ஒன்றென கருதப்படுவதாகவும், 15 வயதை தொட்டுவிட்டாலே வயதுக்கு வந்தவராக கருதப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இந்த இஸ்லாமிய பெண் இஸ்லாமிய சட்டங்களை கடைபிடிக்கிறார். அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டதால் மட்டுமே அவர்களுடைய அடிப்படை உரிமைகளை பறித்து விட முடியாது என்று தெரிவித்துள்ளார். எனவே இஸ்லாமிய பெண்கள் 18 வயதுக்கு கீழ் இருந்தாலும் பருவமடைந்த நிலையில் தனக்கு விருப்பமானவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.