Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னா அடி… மரண அடி அடித்த ஹெட்மயர், ஹோப்… இந்தியாவை ஊதி தள்ளிய வெஸ்ட் இண்டீஸ்..!!

ஹெட்மயர் மற்றும் ஹோப் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி  வென்றது.

அடுத்து  ஹிம்ரன் ஹெட்மயர் களம் இறங்கினார். அவர் எப்போதும் போலவே அதிரடி ஆட்டத்தை இந்திய அணிக்கு எதிராக  அற்புதமாக விளையாடினார்.  அதிரடியாக விளையாடி  அரைசதத்தை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல் 106 பந்தில் 139 ரன்களை அதிரடியாக  விளையாடி அற்புதமான சதத்தை அடித்தார். அதற்கு பிறகு மொஹம்மது  ஷமி ஓவரில் அவுட்டாகி  வெளியேறினார்.
Image
3-வது  விக்கெட்டுக்கு பிறகு நிக்கோலஸ் பூரான் மற்றும் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்து வெற்றிக்கு அருகாமையில்  அணியை   கொண்டு சென்றார்கள் .அதை தொடர்ந்து ஒப்பனராக களம் இறங்கிய ஷாய் ஹோப் பொறுமையுடன் நிதானமாக விளையாடி முதலில் அரைசதத்தை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல் அவரும் இந்தியாவிற்கு எதிராக 151 பந்தில் 102 ரன்களை அடித்து அற்புதமான சதத்தை பூர்த்தி செய்தார்.
Image result for west indies opening batsman images bcci
அவருடன்  ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரானும் கடைசி வரை இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தனர்.அதற்கு முக்கிய காரணம் ஹிம்ரன் ஹெட்மயர்  மற்றும் ஷாய்  ஹோப்பின் அற்புதமான ஆட்டம் தான். வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவரில் மீதம் 13 பந்துகள் இருக்கும் நிலையில்  8 விக்கெட் வித்தியாசத்தில்  291 ரன்கள் அடித்து மிக சுலபமாக வென்றது.

Categories

Tech |