Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் VS அயர்லாந்து : 2 வீரர்களுக்கு  கொரோனா பாதிப்பு ….! அதிர்ச்சியில் சக வீரர்கள் ….!!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில்  பங்கேற்க இருந்த அயர்லாந்து அணியில் 2 வீரர்களுக்கு  கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

அயர்லாந்து கிரிக்கெட் அணி வருகின்ற ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது .இத்தொடரில் பங்கேற்பதற்காக அயர்லாந்து அணி ஃபுளோரிடாவில் இருந்து ஜமைக்காவிற்கு வந்தடைந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கே ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .

இதனால் அவர்கள் இருவரும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிமைப்படுத்துதல் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் அணியில் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி  ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இப்போட்டியில் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கொரோனா  தொற்று காரணமாக அமெரிக்கா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |