வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகின்ற ஜனவரி மாதம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடருக்கான இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அணியின் பயிற்சியாளரான கூறும்போது,” அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கு நாங்கள் தயாராகி வருகின்றோம் .
அதேசமயம் அணியை வலுவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் .உலக கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு வருடத்துக்கும் குறைவாகவே உள்ளது. ஆஷஸ் தொடரில் இருக்கும் வீரர்கள் இல்லாத தற்போதைய இங்கிலாந்து அணியின் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி :
இயான் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், லியாம் டாசன், ஜார்ஜ் கார்டன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், சாகிப் மஹ்மூத், டைமல் மில்ஸ், டேவிட் பெய்ன், அடில் ரஷித், ஜேசன் ராய், பில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜேம்ஸ் வின்ஸ்.