Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி….. 5-ம் தேதி பதவியேற்பு….!!

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 213 இடங்களை பெற்று அபார வெற்றி பெற்றது காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைகின்றது.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் 294 தொகுதிகள் 8 கட்டங்களாக பிரித்து நடத்தப்பட்டது. தேர்தலின்போது மம்தா பானர்ஜிக்கு பா. ஜனதா கடும் நெருக்கடி கொடுக்கும் என கருத்து வெளிவந்தது. கருத்துக் கணிப்பில் பா.ஜனதா சவால் விடும் அளவிற்கு இடங்களை பிடித்து வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் மம்தா பானர்ஜி தனி ஒருவராக நின்று பா.ஜனதா தலைவர்கள் தேர்தல் ஆணையம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடி பிரசாரம் நடத்தி போட்டியிட்டனர்.

இந்நிலையில் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்று கடைசியாக 213 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. பா ஜனதா 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஏறத்தாள 4-கில் மூன்று பங்கு இடங்களை பிடிக்கப்பட்டது. நந்தி கிராமத்தில் சுவெந்து அதிகாரியை எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிட்டு 2 ஆயிரத்திற்கும் குறைவான வாக்கில் தோல்வியை சந்தித்தார். ஆனாலும் அவர் முதல்வராக பதவியேற்ற பின் வேறொரு தொகுதியில் நின்று வெற்றிபெற தீர்மானித்தார். இந்நிலையில் மம்தா பானர்ஜி வருகின்ற 5-ம் தேதி மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றுக் கொள்ளப் போகிறார் என தெரிவிக்கப்படுகின்றன.

Categories

Tech |