மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்வு அடைந்துள்ளது
தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றது. அதில் அசாம் மேற்கு வங்காளத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்வடைகின்றது. மேற்கு வங்காளத்தில் 8 கண்டங்களாக சட்டசபை பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று வருகின்றது. இதில் 30 தொகுதிகளில் வருகின்ற 27ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இறுதிகட்டமாக நடைபெற்ற பிரசாதத்தில் இந்த தொகுதியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்காளத்தில் பிரதமர் நரேந்திர மோடி கந்தி பொதுக்கூட்டத்தில் உரை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி, பங்குரா மாவட்டத்திலுள்ள பிஷ்னுபூரில் பங்கேற்றுள்ளனர். அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. அங்கு மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன. அதில் 47 தொகுதிகளுக்கு மட்டும் 27-ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகின்றது. இந்த 47 தொகுதிகளில் 269 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இன்று மாலை உடன் அந்த 47 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்வு முடிவடைகிறது.
இந்தப் பகுதியில் நேற்று தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி நேற்று தாரங், லட்சுமிபூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இரண்டு மாநிலங்களிலும் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பெரும் பதட்டம் நிலவுகின்றது. இந்த பகுதியில் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் அதிகம் பரவி இருக்கின்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய படையினர் 77 தொகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.